தமுமுக உகாண்டா மண்டலம் சார்பில், உகாண்டா தலைநகர் கம்பாலா, லுகோகோ அரங்கில் வைத்து தேசிய அளவிலான இறகு பந்து போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியில் தேசிய ஜுனியர் இறகுப்பந்து பிரிவில் 15 வயது முதல் 19 வயது வரையிலான போட்டியாளர்கள் 165 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு தமுமுக உகாண்டா மண்டல தலைவர் வாஹித் முஹம்மது, இந்தியன் அசோசியேசன் சேர்மன் ராம் மோகன் ராவ், உகா சேவா தலைவர் மைதீன் மீரான், தமிழ்ச்சங்க தலைவர் சலீம் மற்றும் கேரள முன்னாள் உடற்பயிற்சி ஆசிரியர் ஷேக் முஹம்மது ஆகியோர் பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
மேலும், தமுமுக உகாண்டா மண்டலா நிர்வாகிகளான முஹம்மது அஸ்ரப், அப்துல் முபாரக், சாதிக் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment