Showing posts with label Medical Camp. Show all posts
Showing posts with label Medical Camp. Show all posts

Monday, 13 August 2018

உகாண்டா தமுமுக மற்றும் இந்தியன் அசோசியேசன்இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்...

இறையருளால இனிதாய் நிறைவடைந்த இலவச மருத்துவ முகாம். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு உகாண்டா தமுமுக மற்றும் இந்தியன் அசோசியேசன் உகாண்டாவுடன் இணைந்து நடத்திய இரண்டாவது வருட மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
பல்வேறு அனாதை இல்லங்களைச்சார்ந்த 350 ஆதரவற்ற குழந்தைகள் பயனடைந்தனர். இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டது
குழந்தைகளுக்கு மதிய உணவும் போக்குவரத்து வசதியும் தமுமுக உகாண்டா சார்பாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் புகழும் புகழ்ச்சியும் இறைவன் ஒருவனுக்கே.....!!
இதற்க்காக உதவி புரிந்த சகோதரர்களுக்கும் மட்டும் இதற்க்காக உழைத்த சகோதரர்களுக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் அதிகம் அதிகம் நற்க்கூலியை தருவனாக...
நானும் அநாதைகளை ஆதரிப்பவரும் சுவனத்தில் இப்படி இருப்போம் என்று தன்னுடைய ஆழ்காட்டி விரலையும் நடுவிரலையும் இணைத்து காண்பித்து கூறினார்கள் நபி(ஸல்)...(புகாரி)
நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்.கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். (நபி மொழி)...

Thursday, 26 July 2018

உகாண்டா தமுமுக,இந்தியன் அசோசியேசன் உகாண்டாவுடன் இணைந்து நடத்தும்,மாபெரும் மருத்துவ முகாம்...

ஏக இறைவனின் திருப்பெயரால் .....
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு உகாண்டா தமுமுக, இந்தியன் அசோசியேசன் உகாண்டாவுடன் இணைந்து நடத்தும் இரண்டாவது வருட மாபெரும் மருத்துவ முகாம்...
இன்ஷா அல்லாஹ் நாள் 12.08.18 

இடம்:  இந்தியன் அசோசியேஷன் வளாகம் கம்பாலா உகாண்டா

நேரம்: காலை 10 மணிமுதல் 4 மணி வரை

மருத்துவமுகாம் நிகழ்வுகள்:
பல்வேறு அனாதை இல்லங்களைச்சார்ந்த 250 ஆதரவற்ற குழந்தைகள் பயன்பெறும் வகையில்
பொது மருத்துவம்
பல் மருத்துவம்
கண் மருத்துவம்
போன்ற பிரிவுகளில் மருத்துவ முகாம் நடைபெறஉள்ளது. அனைவரும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்
தமுமுக உகாண்டா

Monday, 19 March 2018

உகாண்டா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உகாண்டா மண்டலம் சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது
உகாண்டா, கம்பாலாவில் உள்ள இந்தியன் அசோசியேஷன் வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இம்முகாம் உகாண்டாவில் உள்ள அனாதை குழந்தைகளுக்காக நடத்தப்பட்டது.