Showing posts with label Events. Show all posts
Showing posts with label Events. Show all posts

Monday, 16 July 2018

தமுமுக உகாண்டா மண்டலம் சார்பில் உகாண்டா தேசிய இறகுப் பந்து போட்டி நடைபெற்றது

தமுமுக உகாண்டா மண்டலம் சார்பில், உகாண்டா தலைநகர் கம்பாலா, லுகோகோ அரங்கில் வைத்து  தேசிய அளவிலான இறகு பந்து போட்டிகள் நடைபெற்றன. 
இப்போட்டியில் தேசிய ஜுனியர் இறகுப்பந்து பிரிவில் 15 வயது முதல் 19 வயது வரையிலான போட்டியாளர்கள் 165 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு  தமுமுக உகாண்டா மண்டல தலைவர் வாஹித் முஹம்மது, இந்தியன் அசோசியேசன் சேர்மன்  ராம் மோகன்  ராவ், உகா சேவா தலைவர் மைதீன் மீரான், தமிழ்ச்சங்க தலைவர் சலீம் மற்றும் கேரள முன்னாள் உடற்பயிற்சி ஆசிரியர் ஷேக் முஹம்மது ஆகியோர் பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
மேலும், தமுமுக உகாண்டா மண்டலா நிர்வாகிகளான முஹம்மது அஸ்ரப்,  அப்துல் முபாரக், சாதிக் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Tuesday, 27 March 2018

தமுமுக உகாண்டா மண்டலம் சார்பில் இந்த வருடம் வழங்கப்பட இருக்கும் நலத்திட்ட உதவிகள்

தமுமுக உகாண்டா மண்டலம் சார்பில் இந்த வருடம் (இன்ஷா அல்லாஹ்) வழங்கப்பட இருக்கும் நலத்திட்ட உதவிகள்
1) கசாசே மற்றும் பாலே மாவட்டங்களில் இரண்டு பள்ளிவாசல்கள் புதியதாக கட்டப்பட்டு வருகிறது.

2) அனாதை குழந்தைகளுக்காக, அகர்வால் கண் மருத்துவ மனை சார்பில், இலவச கண் மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது.

3) அனாதை குழந்தைகளுக்கு மேல்நிலைக் கல்விக்காக உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

4) கம்பாலாவில் உள்ள மிகவும் பின்தங்கிய பகுதியை கண்டறிந்து, அதன் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வது.

5) இரத்தத்தான முகாம் நடத்தப்படுவது.

6) புனித ரமலான் மாதத்தில் அனாதை இல்லங்களுக்கு சென்று உதவிகள் வழங்குவது.

7) இந்திய அசோஷியேஷன்-உடன் இணைந்து சமூக நல்லெண்ண மாநாடு நடத்துவது.
உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Monday, 19 March 2018

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ரமலான் பெருநாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு உதவிகள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உகாண்டா மண்டலத்தின் சார்பில் ஆதரவற்றோருக்கான உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் ஒருநாள் சிறப்பு நோன்பு திறப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. மேலும் அவர்களுக்கு சுமார் 3 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் அடங்கிய உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியினை தமுமுக-வின் உகாண்டா மண்டல தலைவர் வாஹித் முஹம்மது துவங்கி வைத்தார்.