தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உகாண்டா மண்டலம் சார்பில் இதுவரை வழங்கப்பட்டுள்ள பல்வேறு சமூக நலத்திட்ட உதவிகளின் தொகுப்பை காணலாம்.
2017-ம் ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி உகாண்டா, கம்பாலாவில் உள்ள அகாசியா மால் மாபெரும் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இதனை தமுமுகவுடன், இந்தியன் அசோஷியேஷன் இணைந்து வழங்கியது.

2017-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி உகாண்டாவில் உள்ள 2 அனாதை இல்லங்களுக்கு சென்று 10 மில்லியன் ஷில்லிங்க்ஸ் மதிப்புடைய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
2017 ஜுலை 9-ல் பாலே, புடுடா பகுதியில் புதிய பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்டது. இதற்கு 14 மில்லியன் உகாண்டா ஷில்லிங்க்ஸ் பணம் செலவிடப்பட்டுள்ளது.
2017 ஆகஸ்ட் 20-ம் தேதி உகாண்டா இந்தியன் அசோஷியேஷன் வளாகத்தில் வைத்து மாபெரும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் 240 ஆனாதை குழந்தைகள் கலந்து கொண்டு, மருத்துவ பரிசோதனை செய்தனர்.
2018 பிப்ரவரி 4-ஆம் தேதி மிட்லாண்ட் மற்றும் கவேம்பே பகுதியில் உள்ள அனாதை இல்லங்களுக்கு சென்று, அங்குள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு தேவையான அத்தியாவசியமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 70 அனாதை குழந்தைகளுக்கு 5 மில்லியன் செலவில் உதவிகள் வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment