Tuesday, 27 March 2018

தமுமுக உகாண்டா கிளை சார்பில் அனாதை இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உகாண்டா மண்டலத்தில் சார்பில் உகாண்டாவில் உள்ள அனாதை இல்ல குழந்தைகளுக்கு தேவையான அத்யாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
பிப்ரவரி 4, 2018 அன்று தமுமுகவின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தலைவர் வாஹித் முஹம்மத் தலைமையில் அனாதை இல்லங்களுக்கு சென்று, அங்குள்ள மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினர்.
5 மில்லியன் உகாண்டா ஷில்லிங்க்ஸ் மதிப்புள்ள பொருட்களை வழங்கினர். 70 அனாதை குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு தேவையான படுக்கை மெத்தைகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

0 comments:

Post a Comment