தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உகாண்டா மண்டலம் சார்பில் நேற்று (03-06-2018 – ஞாயிற்றுக்கிழமை) கம்பாலா அருகில் உள்ள கவாம்பே அனாதை இல்லம் மற்றும் நான்சானா அனாதை இல்லம் ஆகிய இடங்களில் ரமலான் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாலை வேளையில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது.



![]() |
இஃப்தார் விருந்தில் கலந்து கொண்ட மழலைகள் |
ரமலான் நலத்திட்ட உதவிகளை உகாண்டா மண்டலத் தலைவர் வாஹித் முஹம்மது, செயலாளர் முஹம்மது அஸ்ரஃப், பொருளாளர் அப்துல் முபாரக் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். 2 அனாதை இல்லங்களுக்கான உதவிகளை தமுமுக உறுப்பினர்கள் மற்றும் நல்லுள்ளம் கொண்டவர்களின் பங்களிப்பின் மூலம் நடைபெற்றது. இதன் மூலம் 10 மில்லியன் உகாண்டா ஷில்லிங்க்ஸ் அளவிலான உதவிகள் வழங்கப்பட்டன.




கவாம்பே மற்றும் நான்சானா ஆகிய அனாதை இல்லங்களில் உள்ள சுமார் 150 குழந்தைகளுடன் இஃப்தார் விருந்து நடைபெற்றது.
போட்டோஸ்
முகம்மது அஸ்ரஃப்
0 comments:
Post a Comment